Saturday, August 30, 2008

நீ வேண்டாம்



நீ வேண்டாம்


கவலையின்றி திரிந்த
கணங்கள்
கை கோர்த்து அலைந்த
கானகங்கள்
நாம் மெல்ல நடைபயின்ற
நடைபாதைகள் - கேட்கின்றன
எங்கே இருக்கிறது நம்முடைய
நட்பு இப்போதென்று !!!

சொல்கிறேன் கேள்
நீ வேண்டாம்
உன் நிழல் போதும் - எனக்கு
நான் இளைப்பாற!!!

நீ வேண்டாம்
உன் நினைவுகள் போதும்
- எனக்கு
என் வாழ் நாள் கழித்திட!!!


Sunday, August 24, 2008

என் உயிர் பறிப்பயா?

மனிதர்கள் இல்லாத
இடம் தேடி
போக துடிக்கின்றன
எனது கால்கள்!
எது தவறு என்று
சிலிர்க்கிறது மெய்!
கதறுகிறது உயிர்
வெளியிட சொல்லி!
யாரிடம் கேட்பது
என் உயிர் பறிக்க!!!

Tuesday, August 19, 2008

தொலைவு

தொலைவு

இருமணம் இணைய காத்திருந்த பொழுதுகள்
இப்பொழுது என்னை கேள்வி கேட்கின்றன!
எங்கே இருந்தது இந்த மனதென்று !!!

மனதொத்தவனாய் இருப்பாய் என நினைத்தேன்
இப்பொழுது தானே தெரிகிறது!
ஒத்துப்போகும் மனது இல்லாதவனென்று !!!

நீ வாங்கி கொடுத்த சிரிக்கும்
பொம்மைகள் கூட அழுகின்றன !
இன்று என் நிலையை பார்த்து !!!

நீ வாரி அணைக்கின்ற பொழுதில்
நினைக்கின்றது - என் மனம்
நீ தூக்கி எறிந்த ஒரு தருணத்தை !!!

விரல் படும் இடைவெளியில்
அண்டமும் புலப்படுகிறது
தொலைவு மனதில் என்று !!!

Saturday, August 16, 2008

இழந்து வந்தவள்

கட்டுக்குள் வைக்க 
நினைக்கிறாய் என்னை !!
நீ அறியாதவன் - நான்
கட்டுக்கள் அற்றவள் என்று!
அத்தனையும் இழந்தவள் - நான்
உனக்காக!உன்னையும் இழப்பேன் - என்
மன நிம்மதிக்காக !!!தாயாய்...
தந்தையாய்...
சகோதிரனாய்...
உற்ற நண்பனாய்...
இருப்பாயென்று என்
வலக்கால் பதித்தேன் - உன்னிடத்தில் !
ஒரு மனிதனாய் கூட நீ இல்லாமல் போனாயே !!!