Thursday, September 11, 2008
Saturday, August 30, 2008
நீ வேண்டாம்
நீ வேண்டாம்
கவலையின்றி திரிந்த
கணங்கள்
கை கோர்த்து அலைந்த
கானகங்கள்
நாம் மெல்ல நடைபயின்ற
நடைபாதைகள் - கேட்கின்றன
எங்கே இருக்கிறது நம்முடைய
நட்பு இப்போதென்று !!!
சொல்கிறேன் கேள்
நீ வேண்டாம்
உன் நிழல் போதும் - எனக்கு
நான் இளைப்பாற!!!
நீ வேண்டாம்
உன் நினைவுகள் போதும் - எனக்கு
என் வாழ் நாள் கழித்திட!!!
Sunday, August 24, 2008
என் உயிர் பறிப்பயா?
மனிதர்கள் இல்லாத
இடம் தேடி
போக துடிக்கின்றன
எனது கால்கள்!
எது தவறு என்று
சிலிர்க்கிறது மெய்!
கதறுகிறது உயிர்
வெளியிட சொல்லி!
யாரிடம் கேட்பது
என் உயிர் பறிக்க!!!
இடம் தேடி
போக துடிக்கின்றன
எனது கால்கள்!
எது தவறு என்று
சிலிர்க்கிறது மெய்!
கதறுகிறது உயிர்
வெளியிட சொல்லி!
யாரிடம் கேட்பது
என் உயிர் பறிக்க!!!
Tuesday, August 19, 2008
தொலைவு
தொலைவு
இருமணம் இணைய காத்திருந்த பொழுதுகள்
இப்பொழுது என்னை கேள்வி கேட்கின்றன!
எங்கே இருந்தது இந்த மனதென்று !!!
மனதொத்தவனாய் இருப்பாய் என நினைத்தேன்
இப்பொழுது தானே தெரிகிறது!
ஒத்துப்போகும் மனது இல்லாதவனென்று !!!
நீ வாங்கி கொடுத்த சிரிக்கும்
பொம்மைகள் கூட அழுகின்றன !
இன்று என் நிலையை பார்த்து !!!
நீ வாரி அணைக்கின்ற பொழுதில்
நினைக்கின்றது - என் மனம்
நீ தூக்கி எறிந்த ஒரு தருணத்தை !!!
விரல் படும் இடைவெளியில்
அண்டமும் புலப்படுகிறது
தொலைவு மனதில் என்று !!!
இருமணம் இணைய காத்திருந்த பொழுதுகள்
இப்பொழுது என்னை கேள்வி கேட்கின்றன!
எங்கே இருந்தது இந்த மனதென்று !!!
மனதொத்தவனாய் இருப்பாய் என நினைத்தேன்
இப்பொழுது தானே தெரிகிறது!
ஒத்துப்போகும் மனது இல்லாதவனென்று !!!
நீ வாங்கி கொடுத்த சிரிக்கும்
பொம்மைகள் கூட அழுகின்றன !
இன்று என் நிலையை பார்த்து !!!
நீ வாரி அணைக்கின்ற பொழுதில்
நினைக்கின்றது - என் மனம்
நீ தூக்கி எறிந்த ஒரு தருணத்தை !!!
விரல் படும் இடைவெளியில்
அண்டமும் புலப்படுகிறது
தொலைவு மனதில் என்று !!!
Saturday, August 16, 2008
இழந்து வந்தவள்
கட்டுக்குள் வைக்க
நினைக்கிறாய் என்னை !!
நீ அறியாதவன் - நான்
கட்டுக்கள் அற்றவள் என்று!
அத்தனையும் இழந்தவள் - நான்
உனக்காக!உன்னையும் இழப்பேன் - என்
மன நிம்மதிக்காக !!!தாயாய்...
தந்தையாய்...
சகோதிரனாய்...
உற்ற நண்பனாய்...
இருப்பாயென்று என்
வலக்கால் பதித்தேன் - உன்னிடத்தில் !
ஒரு மனிதனாய் கூட நீ இல்லாமல் போனாயே !!!
நினைக்கிறாய் என்னை !!
நீ அறியாதவன் - நான்
கட்டுக்கள் அற்றவள் என்று!
அத்தனையும் இழந்தவள் - நான்
உனக்காக!உன்னையும் இழப்பேன் - என்
மன நிம்மதிக்காக !!!தாயாய்...
தந்தையாய்...
சகோதிரனாய்...
உற்ற நண்பனாய்...
இருப்பாயென்று என்
வலக்கால் பதித்தேன் - உன்னிடத்தில் !
ஒரு மனிதனாய் கூட நீ இல்லாமல் போனாயே !!!
Monday, April 28, 2008
அன்பின் பிரிவு
கானல் வாழ்க்கையே காணும் கண்கள்
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இயங்க மறுக்கும் இதயம்
பேச இயலாத தருணங்கள்
மொழி கேட்க ஆவலாய் செவி
நடக்க தத்தளிக்கும் கால்கள்
கை நீட்டி அழைத்தும்
நெருங்கிட இயலா தூரம்....
Thursday, April 24, 2008
Tuesday, March 11, 2008
திருமணம்
காலங்கள் கடந்து
செல்ல செல்ல
எதிர்காலத்தை நினைத்து
காத்திருக்க காத்திருக்க...
கை பிடிக்கிறேன் அவனை...
மறக்கிறேன் என்னவனை...
யாரும் அறியாமல் ...
நானும் அறியாமல் ...
"மறக்கிறேன் என்னவனை..." - எதோ காதலன் என்று நினைத்திட வேண்டாம்... என் கற்பனைகள், எதிர்கால கனவுகள் என்று என்னுள்ளானவனை மறக்கிறேன். யாருக்கு தெரியும் கை பிடிப்பவன் எப்படி பட்ட மனசு கொண்டவன் என்று. நம் கனவுகளை அவனுடையாக ஏற்று அது நடக்க வழி கொடுப்பவனோ அல்லது அதற்கு மாறாக இருப்பவனோ...
Subscribe to:
Comments (Atom)